districts

புதுவையில் சிவப்பு குடும்ப அட்டை ரத்து

புதுச்சேரி,மார்ச்.4- சிவப்பு குடும்ப அட்டைரத்து என்ற குடிமைபொருள் வழங்கல் துறையின் அறிவிப்பிற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனுஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால் வருமானமின்றி பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அத்தியவ சிய பண்டங்களை நியாய விலைக டைகள் மூலம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியு றுத்தியது.  இந்நிலையில் ஒன்றிய அரசு  வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிவப்பு ரேசன் அட்டைதாரர்களின் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு தலா 5 கிலோ வீதம் இலவச அரிசி வழங்கி வருகிறது. புதுச்சேரியில் இன்னும் நியாய விலைகடைகள் திறக்கபடவில்லை. இதனால் அரசு பள்ளி கட்டிடங்களில் இந்த அரிசியை வினியோகித்து வருகின்றனர். இந்த அரிசியின் தரம் என்பது கேள்விகுறியாக இரு ந்தாலும், பயணாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அதை வாங்கி வருகின்றனர். தட்டாஞ்சாவடியில் உள்ள புதுச்சேரி அரசின் குடிமைபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் சக்திவேல் கடந்த 1ஆம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஒன்றிய அரசின் கரிப்கல்யான் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்ட த்தின் கீழ் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கான அரிசி புதுச்சேரியில் உள்ள அனைத்து சிவப்பு அட்டைதாரர்களுக்கும் நபர் ஒன்றுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசி வநியோகம் நடை பெற்று வருகிறது.

எனவே சிவப்பு அட்டை பயனாளிகள் அனைவரும் வழக்கம் மோல் தங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார்பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் இலவச அரிசியை வரும் மார்ச் 20 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகின்றது. மேலும் மேற்படி இலவச அரிசி பெறாதவ ர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டு ள்ளது. புதுச்சேரி மக்கள் விரும்பக்கூ டிய ஒற்றை அவியல் அரிசியை த்தான் வழங்க வேண்டும். மக்க ளின் என்னத்திற்கு மாறாக இரட்டை அவியல் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மக்களும் அந்த அரிசியை முழுமையாக வாங்கி பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். சிலர் வாங்கி வீணாக்குவதைவிட, வாங்காமலேயே விட்டுவிடலாம் என்று  விட்டுவிட்டனர். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு புதுச்சேரி மக்கள் விரும்ப க்கூடிய ஒற்றை அவியல் அரி சியை வழங்காதது கடும் தவறு மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதாகும்.  மேலும், மக்கள் விரும்பக்கூடிய அரிசியை வழங்க ஒன்றிய அரசிடம் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு வலியுறுத்த தவறியுள்ளது என்று சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், எதிர் கட்சித் தலைவர் ஆர்.சிவா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன் ஆகியோரும் குற்றம் சாட்டியுள்ளனர். குடிமைபொருள் வழஙகல் துறையின் சிவப்புநிற குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இயக்கு நரின் அறிவிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

;