புதுச்சேரி, மே 19- ஆரோவில் நிர்வாகத்திற்கு எதிராக வெளிநாட்டினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆரோவில் சர்வதேச நகரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னையின் கனவு திட்டமான பசுமை வழிச்சாலை அமைக்க பணிகள் நடைபெற்றது. ஒருதரப்பு ஆரோவில் வாசிகள் இந்த திட்டத்தை எதிர்த்தனர். இதற்கெதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் மரங்களை வெட்டாமல், வீடுகளை இடிக்காமல் பணிகள் தொடரலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் ஆரோவில் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி 500க்கும் மேற்பட்ட ஆரோவில்வாசிகள் ஆரோவில் நகர நிர்வாக செயலகம் அலுவலகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.