புதுச்சேரி, ஜன.11- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரத்தில் ஜனவரி 6 ஆம்தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் புதுச்சேரியில் இருந்து சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் அ.இளவரசி, துணைத்தலைவர் இ.சத்தியா ஆகிய 2 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டு நிறைவில் 83பேர் கொண்ட மத்தியக்குழுவுக்கு புதுச்சேரியில் இருந்து அகில இந்திய துணைத்தலைவர் சுதாசுந்தரராமன், அ.இளவரசி ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.