districts

img

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நத்தமாடிப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமினை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், நத்தமாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.