districts

img

அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்

புதுக்கோட்டை, மார்ச் 28 - நாட்டில் அரசியல் சாசனம் பாதுகாக்கப் பட வேண்டுமென்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாக வேண்டும் என்றார் காங்கி ரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்.

சிவகங்கை மக்களவைத் தொகு திக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அரி மளம், திருமயம், பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மாலை நடைபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம் பரத்திற்கான அறிமுகக் கூட்டங்கள் நடை பெற்றன. 

இதில் கலந்துகொண்டு ப.சிதம்பரம் பேசியதாவது:

மேல்தட்டு மக்களுக்காகவும், ஒருசில பணக்காரர்களுக்காகவும் மட்டுமே பாஜக அரசு செயல்பட்டது. இந்தியா கூட்டணி, விளிம்பு நிலையில் உள்ள நலிந்த பிரிவின ருக்கான செயல்திட்டங்களோடு இந்தத் தேர்தலை சந்தித்து வருகிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் 21 கோடி பேருக்காக பாஜக அரசு எந்தத் திட்டங் களையும் செயல்படுத்தவில்லை. மாறாக நாட்டின் வளங்கள் அனைத்தையும் ஒரு சிலரின் கைகளுக்கு கொண்டு சேர்த்திருக் கிறார்கள். அவர்கள் மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கின்றனர். நலிந்த பிரிவி னர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்த வர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் தொடர்ந்து நசுக்கப்படு கின்றனர்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறித்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை யை மேற்கொண்டார்கள். கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா? பணமதிப்பு இழப்பு காரணமாக தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. 

முந்தைய ஆட்சியில் ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.40-க்கும், டீசல் ரூ.35-க்கும் விற்றது. தற்போது நூறு ரூபாயை தாண்டி விற்கிறது. ரூ.400-க்கு விற்ற சமையல் எரிவாயு, தற்போது ரூ.1000-ஐ தாண்டிவிட்டது. தேர்தலுக்காக ரூ.100 குறைத்தவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உயர்த்துவார்கள்.

ரகுராம் ராஜன், சுப்பிரமணியன் போன்ற தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள் தலைமை பொருளாதார ஆலோசகர்களாக இருந்துள்ளனர். இப்போது தமிழகத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் இருக்கிறார். அவர்,  நாட்டில் வேலை இல்லாமையை ஒழிப்ப தற்கு அரசிடம் வழி இல்லை என்கிறார். இப்படிப்பட்ட அரசு ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?.

எல்லா மாநிலங்களிலும் தற்போது ஒன்றிய அமைச்சர்களாக இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தமிழ் நாட்டைச் சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஏன் போட்டியிட வில்லை?. 

நான் நிதியமைச்சராக இருந்தபோது விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டன.  கல்விக் கடன்கள் வழங்கப்பட்டன. நூறு நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப் பட்டது. இவர்கள் இத்திட்டங்களை எல்லாம் சிதைத்தார்கள். காங்கிரஸ் கட்சி யின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளி வரவுள்ளது. அதில், மாணவர்களின் கல்விக் கடன் குறித்த இனிப்பான செய்தி இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டங்களுக்கு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார். வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இராம.சுப்பு ராம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.வி.ராமையா, என்.பக்ருதீன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;