districts

img

பேரிடர் காலங்களில் மக்களுக்கு துணை நின்ற சிபிஎம் வேட்பாளர்களை ஆதரியுங்கள் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் வேண்டுகோள்

புதுக்கோட்டை, பிப்.13 - பேரிடர் காலங்களில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பல்வேறு வகை களிலும் உறுதுணையாக நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார்  கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் அறந்தாங்கி நகராட்சி 24  ஆவது வார்டு வேட்பாளர் எம்.சம்சாத்  பேகம், அரிமளம் பேரூராட்சி 1 ஆவது வார்டு வேட்பாளராக ஜி.நாகராஜன், கறம்பக்குடி பேரூராட்சி 9 ஆவது வார்டு வேட்பாளராக பி.வீரமுத்து, அன்னவாசல் பேரூராட்சி 13 ஆவது  வார்டு வேட்பாளராக ஜோ.அஞ்சலி தேவி, கீரமங்கலம் பேரூராட்சி 15  ஆவது வார்டு வேட்பாளராக ஞா.பால முருகன், கீரனூர் பேரூராட்சி 6 ஆவது  வார்டு வேட்பாளராக கே.மகாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் சனிக்கிழமை வாக்குகள் சேக ரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டார். பிரச்சாரத்தின்போது அவர் தெரிவிக்கையில், தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்களை போல கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல்  காலங்களில் மட்டுமே மக்களை சந்திக் கக் கூடியவர்கள் அல்ல. எந்தவித  பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அன்றா டம் மக்கள் பிரச்சனைகளுக்காக தொ டர்ந்து பாடுபடுபவர்கள்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா  புயல் பாதிப்பின் போதும், கொரோனா  நோய்த்தொற்று முடக்க காலத்தின் போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஆற்றிய பணி  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் தார்ப்பாய், போர்வை, உடைகள் உள்ளிட்ட தேவைகளையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைத்து மக்களிடம் முறையாக விநியோகித்ததை  நீங்கள் நன்கு அறிவீர்கள்.  குறிப்பாக கீரமங்கலம் பேரூராட்சி யில் 15 ஆவது வார்டு வேட்பாளராக போட்டியிடுகிற பாலமுருகன்  இன்ன மும் குடிசை வீட்டிலேயே வாழ்ந்து வரு கிறார். இவர் மூலமாகத்தான் இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளும், நிவாரணப் பொருட்களும் கிடைக்கப்  பெற்றன. இன்றைக்கும் ஏராளமான ஏழை, எளிய பள்ளி மாணவ-மாணவி களுக்கு பல்வேறு வகைகளிலும் உதவி வருகிறார்.  இப்படி தன்னலம் கருதாமல்  மக்கள் பணியாற்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்திலும், கூட்டணி கட்சி வேட்பா ளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்து பெருவாரியான வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.  அவருடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே. சண்முகம், த.அன்பழகன், சு.மதிய ழகன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சலோமி, கே. தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் எம்.ஆர்.சுப்பையா, எஸ்.கலைச் செல்வம், தென்றல் கருப்பையா, எல். வடிவேல், எஸ்.மணிவண்ணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;