districts

img

தூய்மைப் பணியாளர்களிடம் மரியாதை குறைவாக பேசும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, அக்.11 -  நிரந்தர, ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்களுக்கு வேலைப் பளுவை திணித்து, அவர்களை மரியாதை குறை வாக பேசி, மன உளைச்சலை ஏற்படுத் துவதை கண்டித்தும், மாதந்தோறும் 5  ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண் டும். தொழிலாளியிடம் பிடித்தும் செய்யும் வருங்கால வைப்புநிதி மற்றும்  கூட்டுறவு சொசைட்டிக்காக பிடித்தம் செய்யும் தொகையை முறையாக உரிய  நிறுவனத்தில் கட்ட வேண்டும்.  வருங்கால வைப்பு நிதியில் இருந்து  கடன் வழங்க வேண்டும். தீபாவளி  பண்டிகைக்கு, நிரந்தர ஊழியருக்கு ரூ.10 ஆயிரம், ஒப்பந்த ஊழியருக்கு ரூ.5  ஆயிரம் முன்பணம் வழங்க வேண்டும். நகராட்சியில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டி மற்றும் பேட்டரி வண்டியை சீர்செய்வதுடன். தரமான வண்டியினை கூடுதலாக வழங்க வேண்டும். கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உப கரணங்களை தடையின்றி வழங்க வேண்டும். குப்பை பிரிப்பதற்கு கூடுதல்  பணியாளர்களை நியமனம் செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நக ராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்க (சிஐடியு) தூய்மைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலா ளர் வி.சி.மாணிக்கம் தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் க.முகமதலி ஜின்னா, கட்டுமானத் தொழிலாளர் சங்க  மாவட்ட தலைவர் அன்புமணவாளன், சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல்  கருப்பையா, மாவட்டக் குழு உறுப்பி னர் கே.தங்கராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆர்.கர்ணா, சங்க தலைவர் கவிபாலா ஆகியோர் பேசினர்.

;