districts

img

அரசு கல்லூரியில் அறிவியல் கண்காட்சி; எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, மார்ச் 11-  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலா மாண்டு மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் நடை பெற்று வருகிறது. 35 பிரிவுகளாக அமைக் கப்பட்டிருந்த மாணவ, மாணவிகளின் கண்காட்சியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  பின்னர் ஒவ்வொரு கண்காட்சியையும் சின்னதுரை எம்எல்ஏ பார்வையிட்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டினார். தொடக்கவிழாவுக்கு கல்லூரியின் முதல்வர் கோ.சந்திரவதனம் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சுலோக்சான முன்னிலை வகித்தார். பேரா சிரியர்கள் ஏ.சீனிவாசன், எஸ்.ஏசுராணி, வி.டேவிட், மார்ட்டின், ஜெகனீஸ்வரி, கே. சர்ச்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.