districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பிரச்சாரப் பதாகையை சின்னதுரை எம்எல்ஏ வெளியிட்டார்

புதுக்கோட்டை, ஜூலை 2 - 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவிற்கான பிரச்சாரப் பதாகையை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக் கிழமை வெளியிட்டார். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை  புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்து கிறது. புத்தகத் திருவிழாவை மாவட்டத்தின்  அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதனொரு பகுதி யாக கந்தர்வகோட்டை ஒன்றியத்திலும் தீவிர  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கி ணைப்புக் குழுவினர் முன்னிலையில் பிரச்சா ரப் பதாகையை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை வெள்ளிக்கிழமை வெளியிட் டார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலா ளர் மு.முத்துக்குமார், தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் மற்றும்  அறிவியல் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.