districts

img

பகுதிநேர ரேசன்கடை, பேருந்து வழித்தடம் அமைச்சர் எஸ்.ரகுபதி, எம்.சின்னதுரை எம்எல்ஏ திறப்பு

புதுக்கோட்டை,  மார்ச் 16-  புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் பூங்குடி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையை சட்டத் துரை அமைச்சர் எஸ்.ரகு பதி, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் வியாழக்கிழமை திறந்து வைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினர். மேலும் அதே பகுதியில் மேக்குடிப்பட்டியிலிருந்து புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையையும், கலைஞரின் வருமுன் காப் போம் திட்ட மருத்துவ முகா மையும் துவக்கி வைத்த னர். இதில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டி யன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, ஊராட்சி மன்றத் தலை வர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.