districts

நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த மாவட்டங்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை, அக்.14 - நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து  மாவட்டங்கள் அளவிலான ஆலோ சனைக் கூட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு சிறப்புச் செயலர் ஹர்.சகாய் மீனா தலைமையில் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதாராமு, பெரம்பலூர்  மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா ஆகியோர் முன்னிலையில் புதுக் கோட்டையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ஹர்.சகாய் மீனா தெரிவிக்கையில், “மாநில திட்டக்குழு ஆலோசனையின்படி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை  அலுவலர்களால் நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகள் 104 மாவட்டக் குறி யீடுகள் தொடர்பான தரவுகள் 2015 முதல் 21 துறைகளிடமிருந்து பெறப்பட்டு, நீடித்த நிலையான வளர்ச்சி குறியீட்டிற்கான இணையதளம் மூலம்  பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இப்பணியினை வட்டார அளவில் மேற்கொள்வதற்கு ஏதுவாக வட்டார  அளவில் ஒருங்கிணைப்புக் குழுவா னது வட்டார வளர்ச்சி அலுவலர் தலை மையில் அனைத்து வட்டாரங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட் டங்களின் வளர்ச்சியினை கண்டறிய  ‘மாவட்ட நல்லாட்சி குறியீடுகள்’ அடிப் படையில் மாவட்டங்களை தரவரிசைப் படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்றார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சி யர்கள் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், மரு.என்.ஓ. சுகபுத்ரா, ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஆலோச கர் சுஜாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்ப சாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட உயர்நிலை அலுவ லர்கள் பங்கேற்றனர்.

;