districts

img

பொன்விழா ஆண்டில் புதுகை!

புதுக்கோட்டையைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, 1962இல் தேசிய அளவில் எதிரொலித்தது. அந்தக் காலகட்டத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைந்த ஒரு கோட்டமாகவும், மக்களவைத் தொகுதியாகவும் புதுக்கோட்டை இருந்துவந்தது.

அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாடு முழுவதும் பின்தங்கிய பகுதி களைக் கண்டறிந்து அப்பகுதிகளை முன்னேற்ற சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தத் தனிக் குழுவை அமைத்தார். அக்குழு, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியை மிகவும் பின்தங்கிய பகுதியாகத் தனது அறிக்கையில் தெரிவித்தது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளானது. இந்த விவாதத்தின்கீழ் பேசிய அன்றைய புதுக்கோட்டை மக்க ளவை உறுப்பினர் உமாநாத், புதுக் கோட்டையை மிகவும் பின்தங்கிய பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

பிரதமர் நேரு இதற்குப் பதிலளிக்க வில்லை.  அப்போது, “புதுக்கோட்டை விஷயத்தில் நேரு ஏன் மௌனம் சாதிக்கிறார்? அவர் பிறந்த மாநி லத்தில் புதுக்கோட்டை இல்லையென்றா? புதுக்கோட்டை மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?” என்று உமாநாத் கேள்வி எழுப்பினார். இதற்கு நேரு, “நன்கு வளர்ச்சி யடைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் உள்ளடங்கிய ஒரு கோட்டம்தான் புதுக்கோட்டை. வளர்ச்சியடைந்த மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியைப் பின்தங்கிய பகுதி யாக அறிவிக்க முடியாது” என்று பதிலளித்தார். இதன் பின்னர் புதுக்கோட்டை தனி மாவட்டக் கோரிக்கை முக்கியப் பிரச்சனையானது. -

அண்டனூர் சுரா தமிழ் இந்து (19.1.2024)