பொன்னமராவதி, பிப்.8 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியின் 15 வார்டுகளுக்கு 64 பேர் போட்டியிடுகின்றனர். போட்டியிடும் சுயேட்சை உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த வார்டுகள் 15. இதில் 82 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேரின் வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. தற்போது 64 பேர் போட்டியிடுகின்றனர். இதில் திமுக 12 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகிறது.