districts

தீக்கதிர் செய்தி எதிரொலி தெருநாய்களை கட்டுப்படுத்த அறந்தாங்கி நகராட்சி அதிரடி நடவடிக்கை

அறந்தாங்கி, அக்.28 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள அக்னி பஜார் முக்கிய கடைவீதியாகும். இந்தப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், மருத்து வமனைகளுக்கும் ஏராள மான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.  அக்னிபஜார், அவுலியா நகர், எல்.என்.புரம், காந்தி நகர், எம்ஜிஆர் நகர், கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வந்தன. சில சமயங் களில் பொதுமக்கள் நாய்க் கடிக்கு உள்ளாகினர். இத னால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர், பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்புபவர்கள் என அனை வரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  எனவே நகராட்சி நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்தி பொதுமக்க ளின் அச்சத்தை நீக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அக்.26 அன்று தீக்கதிர்  நாளிதழில் செய்தி வெளி யானது. இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அறந் தாங்கி நகராட்சி நிர்வாகம்  இரண்டு நாட்களாக அக்னி  பஜார் பகுதிகளிலும், அவு லியா நகர் பகுதிகளிலும் 10- க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் தெரு நாய்களை உயிரோடு பிடித்து வருகின்றனர். இது வரை 50-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் பொது மக்கள் நிம்மதி அடைந்துள்ள னர்.  தெருநாய்களை கட்டுப் படுத்த உடனடி நடவடிக்கை எடுத்த அறந்தாங்கி நக ராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட தீக்கதிர்  நாளிதழுக்கும் பொது மக்கள் நன்றி தெரி வித்துள்ளனர்.

;