districts

img

சிபிஎம் அரசியல் வகுப்பு

புதுக்கோட்டை, அக்.30-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஒரு நாள் அரசியல் வகுப்பு ஞாயிறன்று கட்சியின் மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் கல்விக்குழு மாவட்டக் கன்வீனர் அ.மண வாளன் தலைமையில் ‘இடது ஜனநாயக அணி’ என்ற தலைப்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் உரையாற்றி னார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவா ளன் தலைமையில் ‘கட்சி யின் செயல் திட்டம்’ என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, உரையாற்றினார். வெகுஜன வசூல் தயாரிப்பு குறித்து மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் பேசி னார். வகுப்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், என்.பொன்னி, கே.சண்முகம், ஜி.நாக ராஜன், த.அன்பழகன், சு.மதி யழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றியச் செய லாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கன், உபகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.