districts

img

டாஸ்மாக் கடைகளை மூடுக! மாதர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன் 28 - குடும்ப வன்முறைக்கு காரணமாக இருக்கிற டாஸ்மாக் கடைகளை மூட வேண்டு மென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றிய மாநாடு அரி மளத்தில் நடைபெற்றது. காஞ்சனா தலைமை  வகித்தார். ஆ.பட்டம்மாள் முன்னிலை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டத் தலைவர் பி.சுசீலா பேசினர். அடைக்கலமேரி வேலை அறிக்கை வாசித் தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.பாண்டிச் செல்வி வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செய லாளர் டி.சலோமி நிறைவுரையாற்றினார். மாநாட்டில் தலைவராக அ.சித்ரா, செயலாள ராக எப்.அடைக்கலமேரி, பொருளாளராக லில்லிபுஷ்பம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர். பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.  பள்ளி மாணவர்களின் வசதிக்காக காலை யும், மாலையும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். அரிமளத்தை மையப் படுத்தி கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். குடும்ப வன்முறைக்கு காரண மாக இருக்கிற டாஸ்மாக் கடைகளை மூட  வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர்  உதவித்தொகையை திரும்ப வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை களின் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எம்.சித்ரா நன்றி கூறி னார்.

;