districts

img

சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி சிபிஎம் தலைமையில் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை, செப்.22-  புதுக்கோட்டை மாவட்டம் குன் றாண்டார்கோவிலை அடுத்த வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் சட்ட விரோதமாக செயல்படும் கல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட வத்தனா குறிச்சி ஊராட்சியில் வெவ்வயல் பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆதி திராவிடர் கூட்டு குடியிருப்புகள் உள்ளனர். இதன் அருகில் கடந்த 15  ஆண்டுகளுக்கு மேலாக சோத்துப் பாலை முருகேசன் என்பவர் எம்எம்  கிரஷர் என்ற பெயரில் கிரஷர், தார்  பிளாண்டுடன் கூடிய கல் குவாரி நடத்தி வருகிறார்.
மக்களுக்கு பாதிப்பு
இந்நிலையில், இந்த கல்குவாரி  அரசு விதிகளை மீறி செயல்படு வதாகவும், குவாரியில் வைக்கப் படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு குடியிருப்புகளில் விரிசல் ஏற்படு வதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிர்வினால் குழந்தைகள் மனதள வில் பாதிப்பை சந்தித்து வருவதாக வும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச் சிதைவு ஏற்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கல்குவாரி மற்றும் தார் பிளாட்டிலிருந்து வரும்  தூசி மற்றும் புகையினால் காற்று மாசு ஏற்பட்டு பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுவதாகவும் விவசாயம் பாதிக் கப்படுவதோடு கண்மாய்கள், குடி தண்ணீரும் மாசுபடுவதால் வத்த னாக்குறிச்சி, வெவ்வயல்ப்பட்டி, வத்தனாக்குளிச்சி காலனி, சத்திரப் பட்டி, தண்ணீர்பந்தல்பட்டி, கதி ரேசன் நகர், புதுவயில், திருமலை ராயபுரம், உடையாம்பட்டி, சூசை யப்பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வருவதாகவும் கிராம மக்கள்  தெரிவிக்கின்றனர். இதனால், எம்எம் கிரஷரை மூடக் கோரி கடந்த மூன்று ஆண்டு களாக பலமுறை மாவட்ட நிர்வாகத் திற்கும் வருவாய் துறையினருக் கும் சம்பந்தப்பட்ட துறையின ருக்கு மனு கொடுத்தும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை.
கோரிக்கைகளை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகம்
இந்நிலையில், இந்த கிர ஷரை மூடக்கோரி கடந்த இரண்டு  மாதங்களுக்கு முன்பு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலை மையில் சாலைமறியல் போராட்ட மும், அதனைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட கிரஷரை முற்றுகையிட்டுப் போராட்டமும் நடைபெற்றது. இருப் பினும் அந்த கிரஷர் தொடர்ச்சி யாக செயல்பட்டு வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து வியாழனன்று முதல்  குளத்தூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
மேலும், எம்எம் கிரஷர் பட்டா  இடத்தில் மட்டுமல்லாமல் அர சுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்திலும் கடந்த 15 ஆண்டு கால மாக கற்களை வெட்டி எடுத்து கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்ப டுத்தி வருவதாகவும் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் இந்த எம்.எம். கிரஷரை உடனடியாக மூட தமிழக அரசும் மாவட்ட நிர்வா கமும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பிர் ஏ. ஸ்ரீதர் தலைமை வகித்து வருகிறார். போராட்டத்தில் கலந்துகொண்டு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் கண் டன உரையாற்றினர். போராட்டத் தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் சி.அன்புமணவா ளன், சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.கலைச்செல்வன், டி.லட்சாதிபதி, ஒன்றியக் கவுன்சிலர் சூசைமேரி சூசை, ஊராட்சி மன்றத் தலைவர்  மல்லிகா மாயழகு, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் எம். மைக்கேல், துணைத் தலைவர் மெட்டில்டா பால்ராஜ் உள்ளிட் டோர் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சட்டவிரோமாக செயல்படுவதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசும் போது, இந்தக்குவாரி சட்டவிரோத மாக செயல்படுகிறது, அரசு புறம் போக்கு நிலம் ஆக்கிரமித்துள்ளது என்று கண்டுபிடித்து சொன்னதே வருவாய்த்துறையினர்தான். சாதாரணமாக ஒரு செண்ட் புறம் போக்கு இடத்தில் குடியிருக்கும் ஏழை மக்களை ஆக்கிரமிப்பு என்று இடித்து அப்புறப்படுத்தும் வருவாய்த்துறையினர் எம்.எம். கிரஷர் புறம்போக்கு நிலத்தை வளைத்துப்போட்டு கொள்ளைய டிப்பதை எப்படி அனுமதிக்கிறது. கிராம மக்களின் கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொட ரும் என்றார்.
கம்யூனிஸ்டுகளை விலைக்கு வாங்க முடியாது
சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் பேசும்போது,  சட்ட விரோதமாக செயல்பட்ட தால்தான் இந்தக் குவாரி எங்கள்  போராட்டத்தைத் தொடர்ந்து இரண்டு முறை மூடப்பட்டது. தற்பொழுது நீதிமன்றத்தில் பொய் யான தகவலைத் தெரிவித்து ஆலை இயக்கப்படுகிறது. இதனை  எதிர்த்து மாவட்ட நிர்வாகம் நீதி மன்றத்தில் முறையிட்டு இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. குவாரி முதலாளி முருகேசன் என்பவர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை சரிக்கட்டி விட்டோம். அதனால், எங்களை யாரும் தடுக்க முடியாது என்று கொக்கரித்து வருவாதாக செய்தி கள் வருகிறது. அவர்கள் யாரை  வேண்டுமானாலும் சரிக்கட்டலாம். செங்கோடி இயக்கத்தை சேர்ந்த நாங்கள் ஒருபோதும் சோரம் போக மாட்டோம். சட்ட விரோத மாக செயல்படும் இந்த ஆலையை  நிரந்தரமாக மூடும் வரை ஓய மாட்டோம் என்றார்.
போராட்டக்களத்திலேயே சமையல்
போராட்டத்திற்கு இடையில், கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு ஏற்க னவே, இரண்டு முறை இதே அதி காரி தலைமையில்தான் பேச்சு வார்த்தை நடைபெற்றது. கொடுத்த  வாக்குறுதியை அவர்கள் காப்பாற் றவில்லை. எனவே, குவாரி நிரந்தர மாக மூடப்படுகிறது என்கிற அறி விப்பு வரும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் எனக்கூறி  போராட்டக்குழுவினர் மறுத்து விட்டனர். போராட்டக் களத்தி லேயே அவர்கள் உணவு சமைத்து  சாப்பிட்டு வருகின்றனர்.

;