districts

img

அறந்தாங்கி 24 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் சம்சாத்பேகம் வாக்கு சேகரிப்பு

அறந்தாங்கி, பிப்.9 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு சம்சாத் பேகம் போட்டியிடுகிறார்.  புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்  செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட குழு உறுப்பி னர், கே.தங்கராஜ். சிபிஎம் ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா, சிபிஎம் பிரேம்குமார், வழக்கறிஞர்கள் அலாவுதீன், சேக்ரா வுத்தர், மாதர் சங்கம் மும்தாஜ்பேகம், நகர செயலாளர் கணே சன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் நாராயண மூர்த்தி உள்ளிட்டோர் 24 ஆவது வார்டில் வீடு வீடாக சென்று  அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.