districts

img

மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள மன்னரின் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், ஜி.நாகராஜன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;