districts

முதுமலையில் மாமிச உண்ணிகள் கணெக்கெடுப்பு பணிகள் துவக்கம்

உதகை , நவ. 25 -  நீலகிரி மாவட்டம்,  முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒவ்வொரு வருடமும் பருவமழைக்கு முன், பருவ மழைக்கு  பின் என இரண்டு கட்டமாக வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அனைத்து  வகையான வன விலங்குகள், பறவைகள், தாவரங்கள்,  மரம், செடி, கொடிகள் உள்ளிட்டவற்றின் கணக்கெடுப்புகள்  நடைபெறும். இதேபோல் வருடத்திற்கு ஒருமுறை மாமிச உண்ணிகள் குறித்த கண்காணிப்புப் பணிகள் வனப்ப குதிகளில் தனியாக கேமராக்கள் பொருத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு தற்போது துவக்கப் பட்டு ள்ளது. இதற்காக முதுமலை புலிகள் காப்பக வனப்ப குதிகளில் 191 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. புலிகள் காப்பகத்தில் உள்ள நெலாக்கோட்டை, முதுமலை, தெப்பக் காடு, மசினகுடி ஆகிய ஐந்து சரகங்கங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டமாக தெப்பக்காடு வனச்சரகத்தில் நடைபெற்ற கேமரா பொருத்தும் பணி களில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

;