districts

புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

நாகர்கோவில், செப்.25- 2022-2023-ஆம் கல்வியாண்டில், மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முத லாம் ஆண்டு சேர்ந்த பின்னர். இணைய தளம் வழியாக புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயி லும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை யினை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன்  மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம்  செயல்படுத்தப்படும் மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ஆம்  வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை  பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து  மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்ட யப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி  பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடி யாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுத லாக உதவி பெறலாம். மேலும், மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி களில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனி யார் பள்ளியில் Right to Education (RTE)  யின் கீழ் 5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பய னடையலாம்.  மாணவிகள் 8, 10, 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். தொலை தூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்க லைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. 2022-2023-ஆம்  கல்வியாண்டில், மாணவிகள் புதிதாக மேற்  படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத் திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

;