districts

தொடங்கியது தென்மேற்கு பருவமழை குமரியில் வேளாண் பணிகள் தொடக்கம்

நாகர்கோவில், மே 29- அரபிக்கடல் பகுதியில் பகுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளத்தின் தென்பகுதியையும் கன்னி யாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதி யையும் எட்டியுள்ளது. முன்னதாகவே மழை பெய்து வரும் நிலையில் கன்னிப் பூ சாகுபடிக்கான வேளாண் பணிகனை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். வடகிழக்கு பருவமழையும் தென் மேற்கு பருவமழையும் கிடைக்கும் குமரியில் ஏற்கனவே சாரல் மழை பெய்துவந்தது. இந்நிலையில் ஞாயி றன்று (மே 29) தென்மேற்கு பருவமழை கேரளத்திலும் அதை ஒட்டிய குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஞாயிறன்று காலை 11 மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் சாரல்மழை பெய்தது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாசனக் குளங்களும் நிரம்பி வருகின்றன.  பாசன குளங்களிலும் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதை யடுத்து விவசாயிகள் சாகுபடி பணி யில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  மாவட் டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி பணி  நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் நடவுப் பணிகள் முடிந்த நிலையில் சுசீந்தி ரம், அருமநல்லூர், பூதப்பாண்டி, தெரி சனங்கோப்பு பகுதிகளில் நடவுப்பணி நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்களை தங்கு  தடையின்றி வழங்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்கள்.  

சனியன்று சுருளோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.  நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னிமார்,  குளச்சல், குருந்தன்கோடு, குலசேகரம், அருமனை உள்ளிட்ட பகுதிகளிலும் ஞாயிறன்று காலையில் சாரல் மழை பெய்தது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணை நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதி காரிகள் 24 மணி நேரமும் கண்கா ணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் ஞாயிறன்று காலை 45.06 அடியாக இருந்தது. அணைக்கு 448 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 386 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. அணைக்கு 266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 12.63 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.73 அடியாகவும் உள்ளது. இரண்டு சிற்றாறு அணை களின் நீர்மட்டமும் 12 அடியை கடந்ததை யடுத்து ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 17.80 அடியாக உள்ளது. மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 26.49 அடியாக உள்ளது.

திற்பரப்பு அருவி பகுதியில் மழை யின் காரணமாக ரம்யமான சூழல் நிலவு கிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கோடை விடுமுறையை ஒட்டி அரு வியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்க ளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்த வண்ணம் உள்ளனர். மாவட்டம் முழுவ தும் மழை பெய்து வரும் நிலையில் ஞாயிறு மற்றும் திங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

;