districts

img

ரூ.4.69 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள்: அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

நாகர்கோவில், ஜன.1- கன்னியாகுமரி மாவட்  டத்தின் பல்வேறு பகுதி களில் ரூ.4.69 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்  டல் சேவைகள் துறை அமைச் சர் த.மனோ தங்கராஜ் துவக்கிவைத்தார். கருங்கல் பேரூராட் சிக்குட்பட்ட பகுதியில் கருங்  கல் முதல் முளகுமூடு சாலை யில் ஒருங்கிணைந்த சாலை கள் மேம்பாட்டுத்திட்டத் தின்கீழ் (2021-2022) கருங்கல் முதல் பூக்கடை வரை 5 கி. மீட்டர் நீளத்திற்கு ரூ.3.85 கோடி மதிப்பில் ஒருவழி தடத்திலிருந்து இடைவெளி தடமாக மேம்பாடு செய்யும் பணி இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது. நல்லூர்  முதல்நிலை பேரூராட்சிக்கு  உட்பட்ட இலவுவிளை சந்திப் பில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் (2021-2022) ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்ட பாலம் திறந்து வைக்கப்  பட்டது. இதுகுறித்துஅமைச்சர் கூறுகையில், நான்கு வழிச்  சாலை திட்டத்திற்கு ரூ.1400 கோடிக்கு புதிய திட்டம்  தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தேங்காய்ப்பட்ட ணம் துறைமுகத்திற்கு ரூ. 240 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன வர்களின் நலன் காப்பதற்கா கவும் பிரச்சனைகளை தீர்ப்ப தற்காகவும் முயற்சிகள் நடை  பெற்று வருகிறது. கன்னியா குமரி மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்ற கடந்த ஓராண்டு காலமாக  எடுத்த முயற்சியின் விளை வாக 90 சதவீதம் நெகிழி கட்  டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கன்னியா குமரி மாவட்டம்தான் சுற்றுப்  புறத்தை தூய்மையாக வைப்பதில் முதலிடத்தில் உள்ளது. நமது மாவட்டத்திற் கென சில பெருமைகள் உள்  ளது. அதில் இந்தியாவி லேயே முழு கல்வி மற்றும் எழுத்தறிவு இயக்கம் Total Literacy Campign கொண்ட  முதன்மை மாவட்டமாக திகழ்கிறது என்றார். இந்நிகழ்ச்சிகளில் உதவி செயற்பொறியாளர் (நெடுஞ்  சாலை) தனேஷ்சேகர், அரசு வழக்கறிஞர் ஜாண்சன், நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் அ.கணேசன், கருங்கல் பேரூராட்சி தலை வர் டி.சிவராஜ், நல்லூர் பேரூ ராட்சி தலைவர் செ.வளர் மதி கிறிஸ்டோபர் உட்பட  பலர் கலந்து கொண்டார்கள்.

;