districts

img

சுகாதாரத் துறை அமைச்சருக்கு நன்றி கூறிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள்

நாகப்பட்டினம், அக்.18 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, உணவு பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செய லாளர் அ.தி.அன்பழகன் ஆகியோர் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை நேரில் சந்தித்தனர். சென்னை பல்நோக்கு அரசு சிறப்பு  மருத்துவமனையில் உள்ள அலுவலகத் தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, தமிழ் மாநில உணவு பாது காப்பு அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர்  மு.சி.முருகேசன், பொதுச் செயலாளர் அ.தி. அன்பழகன், பொருளாளர் ஜான்.சிம்சன் மற்றும் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். கடந்த ஆட்சியின் பழிவாங்கும் வகை யில், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு 11  ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த  பணிப் பாதுகாப்பு ஆணையை வழங்கிய தற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்த னர்.  உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க  மாநில மாநாட்டில் உறுதியளித்தபடி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு  வழங்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு அலு வலர்கள் அலுவலகங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும். சமூக நீதியான இட ஒதுக்கீட்டையும், முது நிலை பட்டியலின்படியும், வெளிப்படைத் தன்மையும் இல்லாமலும், சம வாய்ப்பு மறுக்கப்பட்டும், கடந்த ஆட்சியின் அதிகார மையத்திற்கு வேண்டியவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர்.  இப்போதும் தொடர்ந்து வரும் மாவட்ட நியமன அலுவலர்கள் பணிக்கான பணி விதியை உடனே உருவாக்கி, அதில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதி களில் தகுதிகளின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் பதவி உயர்வு, உரிய சதவிகிதம் ஒதுக்கி மாவட்ட நியமன அலுவலர்களுக்கான பணி  விதியை வெளியிட வேண்டும்.  இந்திய அளவில் உணவு பாதுகாப்பில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திட காரணமான உணவு பாதுகாப்பு அலுவ லர்களுக்கு நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட வேண்டியுள்ள சில கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். இவை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தர  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி, அமைச்சரி டம் மாநில நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். பரிசீலனை செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

;