districts

img

தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து வாலிபர் சங்கம் ஊர்வலம்-உறுதிமொழி

தேனி, ஜன.27- குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் வஉசி, ராணி வேலு நாச்சியார், மகாகவி பாரதியார் போன்ற தமிழக தலைவர்களின் வரலாற்றினை பிரதிபலிக்கும் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்து, தமிழ கத்தை புறக்கணித்த ஒன்றிய மோடி  அரசை கண்டித்து சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவ முகமூடி அணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும்  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பத்தில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கி ஊர் வலத்தை துவக்கி வைத்தார். ஊர் வலத்தில் சிறுவர் சிறுமியர் மற்றும் வாலி பர்கள் தேசத் தலைவர்களின் உருவம் பொறித்த முகமூடியை அணிந்து தேசியக் கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.  முன்னதாக ஊர்வலத்தை முன்னாள் இராணுவ வீரர்கள் முருகன் மற்றும் முரு கேசன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பார்க் திடலில் நடைபெற்ற உறுதி மொழி நிகழ்வு நடைபெற்றது மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன் ,மாவட்ட பொருளாளர் டி.ராஜா, வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

மாவட்ட நிர்வாகி ஜி.ராஜேஷ் உறுதி மொழி ஏற்பை வாசித்தார்.  விருதுநகர்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டம் முழு வதும் குடியரசு தினத்தையொட்டி கொடி யேற்றுதல் மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வச்சக்காரப்பட்டியில் ஒன்றிய தலைவர் அரவிந்தன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் வீரமுத்து முன்னிலை வகித்தார். அழகம்மாள் தேசியக் கொடியை ஏற்றினார். சிபிஎம் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு சிறப்புரையாற்றினார். சாத்தூர் ஒன்றியம் மேட்டமலையில் கிளைச் செயலாளர் வீர அருண்பாண்டி யன் தலைமையில் மாவட்ட தலைவர் கருப்பசாமி சிறப்புரையாற்றினார். சாத்தூர் நகர் படந்தாலில் மாவட்டக் குழு உறுப்பினர் முத்துக் கணேஷ் தலை மையில் மாணவர் சங்க மாவட்ட செயலா ளர் கே.தோழர் சமயன் வட்ட செயலாளர் பால்பாண்டி ஆகியோர் சிறப்புரையாற் றினர். சாத்தூர் ஒன்றியம் முத்தால் நாயக்கன்பட்டியில் சிஐடியு தலைவர் அன்ட்ரசன் சிறப்புரையாற்றினார். பாலர் பூங்கா செயலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் இராஜ பாளையம் மேற்கு ஒன்றியம் தளவாய் புரம் பேருந்து நிலையத்தில் ஒன்றிய தலைவர் பி.சந்திரகுமார் தலைமையில்  ஒன்றிய பொருளாளர் மகேஷ்வரன் முன் னிலையில் ஆசிரியர் எம்.கௌதம் ராஜ் தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார். உறுதிமொழியினை மாவட்ட செயலா ளர் எம்.ஜெயபாரத் முன்மொழிந்தார். ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரம் பகுதியில் இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட குழு உறுப்பினர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் ஜோதீஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர் மாலை ஈஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஐந்து முனையிலிருந்து காந்தி சிலை வரை  சுதந்திர போராட்ட வீரர்கள் உருவப்படம் அணிந்து ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரணியை மக்கள் நூலகம் செயலாளர் வழக்கறிஞர் தோழர் பசுமலை தொடங்கி வைத்தார்.

;