districts

ஜேசிபியை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு

 தேனி, ஜன.29- ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து அட மானம் வைத்து மோசடி செய்தவர்களை பழனிசெட்டி பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசா ரணை செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள வலையபட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி. இவர் ஜே.சி.பி வாக னம் சொந்தமாக வைத்துள்ளார். இவரிடம் கம்பத்தைச் சேர்ந்த முகுந்தன், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் ஜே.சி.பி. வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். ரூ.70 ஆயிரம் வாடகை தருவ தாகக் கூறி ரூ.35 ஆயிரம் அட்வான்சாக கொடுத்துள்ள னர். அதன் பிறகு மீதித் தொகையை செலுத்தாமல் இருந்துள் ளனர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த எசக்கிபாண்டி, கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணறை சேர்ந்த மாரியப்பன், ராஜ்குமார் ஆகியோர் ரூ.8 லட்சத்திற்கு ஜே.சி.பி,யை அடமானம் வைத்துள்ளனர். மேலும் ஜே.சி.பி.யின் வாகன எண்ணை மாற்றி டயர்களை மாற்றி விற்று விட்டதாகவும், தனக்கு சேர வேண்டிய தொகையை தராமல் நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகவும் ஆண்டி தேனி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் புகார் அளித்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.