கடமலைக்குண்டு, பிப்.5- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழுவில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்க ளுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேகமலை அருவியில் மட்டும் 2 ஆண்டு களாக தொடர்ந்து தடை நீடித்து வந்தது. எனவே மேகமலை அருவியில் தடையை நீக்க மாவட்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேகமலை அருவிக்கு சுற்றுலா பய ணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப் பட்டது.