கடமலைக்குண்டு, ஜுன் 20- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன் றிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயி லின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் போதிய அளவு மழை இல்லாத காரண மாக மூலவைகை ஆற்றில் நீர் வரத்து முற்றிலு மாக வறண்டு போனது. இதனால் மூல வைகை யாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறு களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது. மேலும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வந்ததால் விவசாயம் பாதிக்கப் படும் சூழ்நிலை உருவானது. எனவே பொது மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் மழையை எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலை யில் கடமலை மயிலை ஒன்றியத்தில் பரவலாக அனைத்து கிராமங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை மூல வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து வெள்ளிமலை வனப் பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நீர்வரத்து காரணமாக வருசநாடு உள்ளிட்ட கிராமங்க ளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியுள் ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.