districts

ஆண்டிபட்டியில் வி.தொ.ச போராட்டம் எதிரொலி காளவாசல் உரிமையாளர் - குவாரி உரிமையாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தேனி, ஜூன் 7- ஆண்டிபட்டியில் அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின் காத்திருப்பு போராட்டத்தின் எதி ரொலியாக காளவாசல் -குவாரி உரிமையாளர்களிடையே நடந்த அமைதி கூட்டத்தில் உடன்பாடு ஏற்  பட்டது.  ஆண்டிபட்டி அருகே மண் குவாரியில் இருந்து செங்கல் காள வாசல்களுக்கு சொந்த வாகனத்தில் மண் தரமறுத்து ,அதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வாழ்  வாதாரம் இழந்து வரும் சூழல்  ஏற்பட்டது. கன்னியப்பபிள்ளை பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 50க்  கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்  களில் பணிபுரியும் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. குவாரி உரிமையாளர்களின் அரா ஜக போக்கை கண்டித்து ஆண்டி பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் தலைமையில் திங்க ளன்று காளவாசல் தொழிலாளர் கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆண்டிபட்டி வட்டாட்சி யர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில  தலைவரும், முன்னாள் பெரிய குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னருமான ஏ.லாசர் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சி தலைவர்கள் செங்கல் காளவாசல் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்கா ணிப்பாளர் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது . அப்போது, செவ்வாய்க்கிழமை மண் குவாரி உரிமையாளர்கள், செங்கல் காள வாசல் உரிமையாளர்கள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

உடன்பாடு
அதன் அடிப்படையில் செவ் வாய்க்கிழமை ஆண்டிபட்டி வட்  டாட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத் தில் துணை வட்டாட்சியர் உமா  தேவி, துணை காவல் கண்கா ணிப்பாளர் ராமலிங்கம், காவல் ஆய்வாளர் சிவக்குமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, மாவட்ட பொருளாளர் கே.தயாளன், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் மற்றும் காளவாசல் உரிமையாளர்கள், குவாரி உரிமையாளர்கள் சிவக் குமார், வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவக்குமார் நடத்  தும் செம்மண் குவாரியில் காள வாசல் உரிமையாளர்களின் 12 டிராக்டர்களுக்கு தேவையான மண் கொடுப்பது, வினோத் நடத்தும் செம்மண் குவாரியில் காளவாசல் உரிமையாளர்களின் 12 டிராக்டர் களுக்கு நாள் ஒன்றுக்கு 3 டிராக்டர் வீதம் காளவாசலுக்கு மண் வழங்கு வது என முடிவு செய்யப்பட்டது.

;