districts

பரிகாரம் என்ற பெயரில் ரூ.65 லட்சம் மோசடி

தேனி, மார்ச் 31- திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டைச்  சேர்ந்த வர் ஐயப்பன் மகன் அருள்மணிகண்டன். இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் மன நலன் பாதிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பூஜை, பரிகாரம் ஆகிய வற்றின் மூலம் அருள்மணிகண்டனை குணப்படுத்து வதாக தேவதானப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன், அவரது மனைவி விஜி ஆகியோர் அருள்மணிகண்ட னின் பெற்றோர் ஐயப்பன், மீராபாய் ஆகியோரை அணுகியுள்ளனர். இதை நம்பி கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் 2022, நவம்பர் மாதம் வரை சந்திரசேகரன், விஜி, அவர்களது உறவினர் பாண்டி ரமேஷ், கார் ஓட்டுநர் ஆனந்த் ஆகியோரின் வங்கிக் கணக்கு மூலம், ஐயப்பன் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.65 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அருள்மணிகண்டனின் மன நலம் பாதிப்பு குணமாகாததால் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு சந்திரன், விஜி ஆகியோரிடம்  கேட்டதற்கு, அவர்கள் பணத்தை திரும்பத் தர மறுத்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக அருள்மணிகண்டனின் மனைவி இந்திரா பிரிய தர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சந்திரன் அவரது மனைவி  விஜி, பாண்டி ரமேஷ், ஆனந்த் ஆகி யோர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

;