தென்காசி, ஏப்.20- மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ, தென்காசி மாவட் டம், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:
“இந்திய நாட்டின் வர லாற்றில் 47 ஆண்டுக்குப் பின் நாம் சந்திக்கும் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந் தது. எதிர்காலத்தை தீர்மா னிக்கும் தேர்தல். நாடாளு மன்ற ஜனநாயகம் நீடிக்க வேண்டுமா அல்லது அதிபர் ஆட்சி அமைய வேண்டுமா என்பதற்கு விடை சொல்லும் தேர்தல். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப் பட்டது. காஷ்மீரில் 370-ஆவது அரசியல் சட்டம் குப் பையில் போடப்பட்டது.
சனாதன சக்திகள் எல் லாம் ஒன்று சேர்ந்து அகமதா பாத்தில் இந்திய அரசியலை எப்படி கொண்டு செல்ல வேண் டும் என்று தீர்மானித்து ஒரு பிரகடனத்தை வெளியிட்ட னர். அதில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும், இஸ்லாமியர் களுக்கு ஓட்டுரிமை கிடை யாது, இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்வைத்து பேசியுள்ளனர். எனவே தான் மோடி ஆட்சி முறையில் பல மடைமாற் றங்களை கொண்டு வரு கிறார்.
அதிபர் ஆட்சியை அமல்படுத்தி விட்டால் தானே அதிபராகி விடலாம் என்றும் மோடி முயற்சிக்கி றார். ஆகவே, ஜாதி மதங்க ளால் நாட்டை பிளவுபடுத்து வதில் பாஜகவினர் குறியாக உள்ளனர்.”
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.