திருவாரூர், ஜூன் 6 - திருவாரூர் இராபியம் மாள் அகமது மொய்தீன் மகளிர் கல்லூரியில், கல்லூரி நிர்வாகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம், ஈக்யூ டாஸ் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற் றது. ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டு ஆணையத் தின் கீழ் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி நிறுவன களைச் சேர்ந்த 52 கம்பெனி கள் கலந்து கொண்டன. இதில் 401 மாணவர்கள் தேர்வாகினர்.