மாணவர் சங்க கிளை மாநாடு
திருவாரூர், ஜூன் 5 - திருவாரூர் அருகேயுள்ள திரு.வி.க அரசு கல்லூரியின் மாணவர் சங்க கிளை மாநாடு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ம.திருமுருகன் தலைமை யில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட துணை செயலாளர் ப.சுர்ஜித் பேசினார். தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மாவட்ட செயலா ளர் இரா.ஹரிசுர்ஜித் நிறைவுரை யாற்றினார். இம்மாநாட்டில் புதிய தலைவராக ச.பிரவின் குமார், செயலாளராக க.மதன் குமார் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 30 பேர் கொண்ட கல்லூரி கிளையும் தேர்வு செய்யப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசு
தஞ்சாவூர், ஜூன் 5- தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை யின் சார்பில் மாவட்ட அளவி லான, குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய கலைப் போட்டிகள், தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய அலு வலகத்தில் கடந்த மே 9 அன்று நடத்தப்பட்டன. இப்போட்டியில் 105 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற 15 மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.6 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 4,500, மூன்றாம் பரிசாக ரூ.3, 500-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மண்டலக் கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் சி.நீலமேகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கே.ரங்க ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஜூன் 11 வரை நெட்பால் பயிற்சி முகாம்
அரியலூர், ஜூன் 5 - அரியலூர் மாவட்ட அளவி லான 17 ஆம் ஆண்டு நெட்பால் கோடைகால பயிற்சி முகாம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி துவங் கியது. முகாமிற்கு மாவட்ட நெட்பால் கழக செயலாளர் பாண்டியன் தலைமை வகித் தார். பரப்பிரம்மம் பவுண்டே ஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் தலை வர் பயிற்சியை துவக்கி வைத் தார். மாணவ-மாணவிகளுக்கு நெட்பால் பயிற்சியினை தேசிய விளையாட்டு வீரரும் மற்றும் தேசிய நடுவருமான ராஜேஷ், அமுதி மற்றும் தேசிய விளை யாட்டு வீரர் விக்னேஷ் ஆகி யோர் பயிற்சி அளித்து வருகின் றனர். இப்பயிற்சி ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெறும்.
நாளை குறைதீர் கூட்டம்
கும்பகோணம், ஜூன் 5- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கும்பகோணம் வடக்கு கோட் டத்திற்கு உட்பட்ட பகுதி களை சேர்ந்த மின் நுகர்வோ ருக்கான குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறி யாளர் நளினி தலைமையில் ஜூன் 7 ஆம் தேதி (செவ் வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வாரிய கும்ப கோணம் ராஜம் தோட்டம் வளாகத்தில் நடைபெறு கிறது. இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில செட்டி மண்டபம், திப்பிராஜபுரம், நாச்சியார் கோவில், செம்மங்குடி, திருவிடைமருதூர், ஆடு துறை, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்க லம், பந்தநல்லூர், கோனாலம் பள்ளம், குறிச்சி, திருப்பனந் தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட் டத்துக்கு உட்பட்ட பகுதி களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மின் விநியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என செயற் பொறியாளர் குணசீலன் தெரிவித்துள்ளார்.