districts

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க மே 21, 22 தேசிய நெல் திருவிழா

திருவாரூர், மே 8- தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் 2006-ல் தொடங்கி வைக்கப்பட்ட தேசிய அளவிலான நெல் திருவிழா பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமனால் நடத்தப்பட்டு வந்தது.  இவ்வாண்டும் தமிழக அரசின் வழிகாட்டுதலோடு சமூக இடைவெளியுடன் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய முன்னோடி உழவர்களின் தலைமையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஏ.ஆர்.வி திருமண அரங்கத்தில் மே 21, 22 தேதிகளில் நடைபெறவுள்ளது. தேசிய நெல் திருவிழாவில் உழவர்களின் பேரணி, கருத்தரங்கம், பாரம்பரிய விதை நெல் வழங்கல், பாரம்பரிய உணவு திருவிழா, கண்காட்சி, கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழாவில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்மை துறை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான உழவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விழாவில் நுகர்வோர் அனைவரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டுமென தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு சார்பில் பொது செயலாளர் ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

;