districts

img

எம்ஜிஆர் கல்லூரி கட்டடத்தை குடவாசலில் அமைக்கக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

குடவாசல், செப்.29- குடவாசல் எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கான  புதிய கட்டிடம் குடவாசல் பகு தியிலே அமைய வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே காத்திருப்பு போராட் டம் இந்திய மாணவர் சங்  கத்தின் சார்பில் வியாழ னன்று நடைபெற்றது. குடவாசல் அரசு கலை  அறிவியல் கல்லூரி கடந்த  அதிமுக ஆட்சியில் 2014-ல்  தற்காலிகமாக அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கப்பட் டது. அதன் பின் தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிக்கான கட்டிடம் கட்ட வேண்டும் என  கோரிக்கை வலியுறுத்தி பல்  வேறு போராட்டங்கள் நடத்தி னர்.  இந்த நிலையில் தற் போது திருவாருர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குட வாசல் அருகே உள்ள செல்  லூர் கிராமத்தில் கல்லூ ரிக்கான இடம் தேர்வு செய்  யப்பட்டுள்ளாதாக தெரி கிறது.  இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குட வாசல் பகுதியில், புதிய கல்  லூரி கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலி யுறுத்தி வியாழனன்று குட வாசல் பேருந்து நிலையம் அருகே காத்திருப்பு போரா ட்டம் இந்திய மாணவர் சங் கத்தின் ஒன்றிய தலைவர் மனோஜ்,செயலாளர் சுக தேவ் ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தை முன் னாள் மாவட்ட துணைச் செய லாளர் ஆறு.பிரகாஷ் துவக்கி வைத்தார். போராட்டத்துக் காக ஆதரவு தெரிவித்து  மாண வர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த், செயலாளர் ஹரி சுரிஜித்,  மாவட்ட துணை செயலா ளர் சூரியா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் காத்தி ருப்பில் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  திருவாரூர் கோட்டாட்சி யர் சங்கீதா தலைமையில் குடவாசல் வட்டாட்சியர் குரு நாதன் மற்றும் துணை கண் காணிப்பாளர் இலக்கியா, குடவாசல் காவல் ஆய்வா ளர் கருணாநிதி ஆகியோர் மாணவர் சங்க நிர்வாகிகளு டன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்படாத தால் மாணவர்களின் போராட் டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

;