districts

img

புதுக்குடியில் சேமிப்புக் கிடங்கு அமைப்பு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

குடவாசல், செப்.22-  திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணி நேரடி நெல் கொள்முதல் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், குடவாசல் வட்டம், புதுக்குடி கிரா மம் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் ரூ.4 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் 4,500  மெ.டன் கொள்ளளவில் கான்கிரீட் தளத்து டன் கூடிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு  வருவதையும், மஞ்சக்குடி பொது விநியோ கத் திட்ட அங்காடி ஆகியவைகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை அரசு முதன்மை செயலா ளர் ஜெ.இராதாகிருஷ்ணன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம், கோவில்வெண்ணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலுக்கு வரப்பட்டுள்ள நெல்லினை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, கோவில்வெண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தினை பார்வையிட்டு அலு வலக நடைமுறைகள் மற்றும் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.  பின்னர் குடவாசல் வட்டம் புதுக்குடி கிரா மத்தில் ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பீட் டில் 4,500 மெ.டன் கொள்ளளவில் கான்கீரிட் தளத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கு அமைக் கப்பட்டு வருவதை பார்வையிட்டு பணி களின் முன்னேற்றம் குறித்து பொறியாளர் களிடம் கேட்டறிந்தார்.

மஞ்சக்குடி பொது  விநியோகத்திட்ட அங்காடியினை பார்வை யிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள் களின் விவரங்கள் உள்ளிட்டவைகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் இராதகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல  மேலாளர் இராஜராஜன், கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, திருச்சி மண்டலம் குடிமை பொருள் வழங்கல்  குற்ற புலனாய்வுத்துறை அலுவலர் ஏ.சுஜாதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக செயற்பொறியாளர் குணசீலன், உதவி  செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்த னர்.

;