districts

அஞ்சல் துறையில் பெண்  குழந்தைகளுக்கு சேமிப்புத் திட்டம்

திருவாரூர், மே 21 - பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் அவர் களின் வளமான எதிர்காலத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்கவும், அரசால் அஞ்சல்துறையின் மூலம்  “சுகன்யா சம்ரித்தி சேமிப்பு கணக்கு” என்ற திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன் வட்டி விகிதம் மற்ற சேமிப்பு திட்டங்களைவிட மிகவும் அதிகம். இந்தத் திட்டம் பிறந்தது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண்  குழந்தைகளுக்கு மட்டுமே உரியதாகும். பெண் குழந்தை களின் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இக்கணக்கை தொடங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும். கணக்கு துவங்கும் போது குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி துவங்கலாம். கணக்கில் மேற்கொண்டு பணம் செலுத்தும்போது ரூ.50-ன் மடங்குகளில்  செலுத்தலாம். ஒருவர் ஒரு கணக்கில் எத்தனை முறை வேண்டு மானாலும் பணம் செலுத்தலாம்.  ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.250 கணக்கில் செலுத்தி யிருக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1  லட்சத்து 50 ஆயிரம் வரை செலுத்த முடியும். தற்போதைய வட்டி விகிதம் 7.6 சதவீதம் (அரசின் மாறுதலுக்குட்பட்டது) (மற்ற சேமிப்பு திட்டங்களை விட மிகவும் அதிகம்), கணக்கு துவங்கப்பட்ட நாளிலிருந்து 21 வருடம் முடிந்தபின் முதிர்ச்சி  அடையும்.  உங்கள் பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பியவுடன் அவர்களின் மேற்படிப்பு மற்றும் திருமணத்திற்காக மொத்த தொகையில் (அசல்+வட்டி) 50 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம். இக்கணக்கில் முதல் 15 வருடம் வரை மட்டுமே  பணம் செலுத்தினால் போதுமானது. ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தலாம். இதில் சேமிக்கப்படும் தொகைக்கு வரு மான வரிவிலக்கு உண்டு. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவ ணங்கள்: விண்ணப்பம், பெற்றோரின் ஆதார் நகல் அல்லது  குடும்ப அட்டை நகல், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற் றோரின் புகைப்படம் - 2, அனைத்து தலைமை அஞ்சலகங் கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் விண்ணப் பிக்கலாம். இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள அஞ்சலக  அஞ்சல் அலுவலர், அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரின் சிறுசேமிப்பு திட்ட நேர்முக உதவியா ளர், ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்  ப.காயத்ரிகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.

;