districts

img

ஓஎச்டி - தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்குக! உள்ளாட்சித் துறை ஊழியர்கள் கோரிக்கை

மன்னார்குடி, செப்.28 - ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர்கள் மற்றும் என்.எம்.ஆர். சங்கத்தின் 8-வது  பேரவை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத் தில் நடைபெற்றது. பேரவைக்கு டி.முருகை யன் தலைமை வகித்தார்.  பேரவையில் மாவட்டத் தலைவராக டி.முருகையன், மாவட்டச் செயலாளராக எம். முரளி, மாவட்டப் பொருளாளராக ஜி.ரெகு பதி, கிராம ஊராட்சி மாவட்ட இணைப்பு குழு தலைவராக   கே.கோவிந்தராஜ், செயலா ளராக எஸ்.காமராஜ், பொருளாளராக ஏ.பி. தனுஷ்கோடி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். கிராம ஊராட்சி ஒருங்கி ணைப்பு குழு மாநிலத் தலைவர் பன்னீர் செல்வம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரை யாற்றினார்.  மேல்நிலைத் தொட்டி இயக்குநர் களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 வழங்கிட வேண்டும். ஏழாவது ஊதிய குழு பரிந்துரை களின்படி ஊதியம் மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான பணப்பயன் ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.2000 மாத ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;