districts

சுமைப் பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குக! சிஐடியு கோரிக்கை

திருவாரூர், ஜன.10 - டாஸ்மாக் மதுபான கிடங்குகளில் பணி யாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. சங்க நிர்வாகிகள் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் ஏ.நித்திரன் தலைமையில் நடைபெற்றது.  சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகை யன், சங்க மாவட்ட செயலாளர் கே.கஜேந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கிடங்கில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு தரமான குடிநீர் மற்றும் முதலுதவி பெட்டி அமைத்து தர வேண்டும். கிடங்கிற்கு  செல்லும் முக்கிய சாலையை நிரந்தர சாலை யாக அமைத்துத் தர வேண்டும். ஊதியத்தை  உயர்த்தி வழங்குவதுடன் மருத்துவ காப்பீட்டு  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கணக்கு  துவங்கப்படாத சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு உரிய பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.