நீடாமங்கலம், ஜுலை 25 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கானூர், வடக்கரைவயல், தென்கர வயல் கிராமத்தினர் 9 பேர் பல்வேறு கட்சி யிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி தென்கரவயலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைச் செய லாளர் கே.தங்கராசு தலைமை வகித்தார். கட்சியில் இணைந்தவர்களை பாராட்டி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் டி. ஜான் கென்னடி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் வி.பூசாந்திரம், மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.சுமதி, நகரச் செயலாளர் வி.தமிழ் மணி, பருத்திக்கோட்டை கிளை செயலாளர் அருளானந்தசாமி, மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் ஜெயபால், நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.