districts

img

குடவாசல் எம்.ஜி.ஆர். அரசுக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக! மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆட்சியரிடம் மனு

குடவாசல், அக்.2 - திருவாரூர் மாவட்டம் குடவாசல்  எம்.ஜி.ஆர் அரசு கலை அறிவியல்  கல்லூரி, கடந்த அதிமுக ஆட்சியில்  2015 ஆம் ஆண்டு குடவாசல் அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் தற்காலிகமாக துவக்கப்பட்டது. தொடர்ந்து 7 வருடங்களாக இந்தப் பள்ளி வளாகத்திலேயே கல்லூரி நடை பெற்று வருகிறது.  கல்லூரிக்கான புதிய இடத்தை தேர்வு செய்து, அனைத்து வசதிகளு டன் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட தர வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை. மாணவர்களின் கோரிக் கையை நிறைவேற்றக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இத னால், மாணவர்கள் கோரிக்கை அடிப்ப டையில் புதிய இடம் தேர்வு செய்து,  அதற்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.  இந்நிலையில், புதிய இடத்தை திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி யில் தேர்வு செய்துள்ளதை அறிந்த மாணவர்கள், கல்லூரிக்கான புதிய இடம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்டு  குடவாசல் பகுதியில் அமைய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள னர். இதனை வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தின் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வரு கின்றனர்.   போராட்டத்தை ஆதரித்து சிபிஎம்  மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம்,  மாணவர்கள் மத்தியில் உரையாற்றி, மாவட்ட ஆட்சியர் வாயிலாக மாணவர் களின் கோரிக்கையை அரசிடம் கொண்டு  சேர்ப்பதாக உறுதியளித்து இருந்தார்.

இதனையடுத்து சனிக்கிழமை சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் ஆகியோர் திரு வாரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, போராட்டக் களத்தில் மாண வர்கள் அளித்த மனு மற்றும் கட்சியின்  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மாவட்ட குழு சார்பாக அளித்த கோரிக் கையை நிறைவேற்ற கோரி அளித்த மனுவையும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி  கிருஷ்ணனிடம் வழங்கினர்.  மாவட்ட ஆட்சியர் உடனடியாக குட வாசல் வட்டாட்சியரை நேரில் அழைத்து  கல்லூரிக்கான புதிய இடத்தை தேர்வு  செய்து, மாணவர்களின் கோரிக் கையை ஆய்வு செய்ய அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார்.  இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின்  அறிவுறுத்தல்படி, குடவாசல் வட்டாட்சி யர் குருநாதன் தலைமையில், மண்டல  துணை வட்டாட்சியர் சரவணகுமார் மற்றும் கிராம வருவாய் துறை அலுவ லர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட் டோர் குடவாசல் வட்டம் மூலங்குடியில்  உள்ள விளையாட்டு மைதானத்துக்கு எதிர்புறம் உள்ள, அரசூர் வருவாய் கிரா மத்தை சேர்ந்த பகுதியில் இடத்தை  ஆய்வு செய்து, அந்த அறிக்கையை  மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள தாக தெரிகிறது.

;