districts

பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளை உள்ளாட்சி உறுப்பினர்கள் தீர்க்க கோரிக்கை

திருவாரூர், மார்ச் 2 - கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நகர்ப் புற உள்ளாட்சி நடைபெறாத கார ணத்தினால் மக்களின் வாழ்வாதார பிரச்ச னைகள் தீர்க்கப்படாமல் தேங்கி கிடக் கின்றன. தற்போது திருவாரூர் மாவட்டத் தில் புதிதாக பொறுப்பேற்கும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பி னர்கள் அரசிடமிருந்து நிதியைப் பெற்று பிரச்ச னைகளை தீர்க்க வேண்டும். மேலும் தொலைநோக்கு திட்டங்களையும் அமல்ப டுத்தி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு நுகர் வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதாந்திர கூட்டம் மைய அலுவலகத்தில் தலைவர் முனைவர் அண்ணாதுரை தலை மையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஆர்.ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். சுற்றுச்சூழல் இயக்குநர் வி.தர்மதாஸ், பயிற்சி இயக்குநர் சி.செல்வகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகரத்தில் தேங்கிக் கிடக்கும்  நீண்ட கால பிரச்சனைகளான குண்டும் குழியு மான சாலைகள், பாதாள சாக்கடை இணைப்பு கள், தெருவிளக்குகள், தரமான குடிநீர் வசதி,  பராமரிப்பின்றி உள்ள நகராட்சி பூங்காக் கள், குப்பை கிடங்குகள், நகராட்சி நூலகம்  செயல்பாடு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கையொட்டி நிறுத்தி  வைக்கப்பட்ட அனைத்து ரயில்களும் உட னடியாக இயக்கப்பட வேண்டும்.  திருவாரூர் வழியாக தென்பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில்கள் இயக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பெயர் பட்டி (Name  batch) வைத்து அடையாளப்படுத்த வேண்டும். திருவாரூர் நகராட்சி பகுதியில்  நீர்நிலை உட்பட அனைத்து ஆக்கிரமிப்பு களை பாரபட்சமில்லாமல் அகற்ற வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. நிறைவாக இணைச் செயலாளர் காளி முத்து நன்றி கூறினார்.

;