குடவாசல், மார்ச் 2 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு கவுன்சிலர்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, குடவாசல் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட 15 கவுன்சிலர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா புதிய உறுப்பினருக்கான பதவியேற்பு உறுதிமொழியை வாசிக்க கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பிரபாகரன், பேரூர் கழக செயலாளர் ஆர்.முருகேசன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்டக்குழு உறுப்பினர் எப்.கொரக்கோரியா, காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் கே.எஸ்.முனிய்யா, நகர தலைவர் செந்தில் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.