districts

img

எல்ஐசி பங்குகளை ஒன்றிய அரசு விற்பதை கண்டித்து காப்பீட்டு கழக ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மார்ச் 5- பொதுத்துறை வங்கி களில் ஒன்றும் இந்திய நாட்டு மக்களின் உரிமை சார்ந்த பெருஞ்சொத்துமாகிய எல்ஐசி யின் 50 சதவீத பங்குகளை பெருமுதலாளிகளுக்கு விற்பதற்கு முடிவு செய்துள்ள ஒன்றிய நரேந்திர மோடி அர சாங்கத்தின் செயலைக் கண்டித்தும் அந்த முடிவைத்  திரும்பப் பெற வலியுறுத்தி யும் சனிக்கிழமை காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மாபெரும் பெருந்தி ரள் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  திருவாரூரில் ரயில்  நிலைய சந்திப்பு அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஊழியர் சங்க மூத்த தலைவர் சேதுராமன் தலை மையேற்றார். கோட்ட செய லாளர் செந்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முரு கையன், லிகாய் முகவர்கள் சங்க கோட்ட தலைவர் இரா. கருணாநிதி உட்பட சிஐடியு  நிர்வாகிகள், ஆசிரியர், அரசு  ஊழியர், தோழமை சங்கத்தி னர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர்  தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி ஊழயர் களின் கோரிக்கைகளை ஆத ரித்து உரையாற்றினார்.

திருச்சிராப்பள்ளி
காப்பீட்டுக் கழக ஊழியர்  சங்க தஞ்சை கோட்டை சார்பில் உறையூர் குறத்தெரு வில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி  எஸ்இசட்ஐஇஎப் துணைத்த லைவர் சுவாமிநாதன், டிஆர்இயு திருச்சி கோட்ட தலைவர் மாதவன், பிஎஸ்இ எல்இயு மாவட்ட உதவி  செயலாளர் அஸ்லாம்பாட்சா, பெல் சிஐடியு பொதுச் செய லாளர் பிரபு, எம்ஆர்ஜிஐஇஏ இணைச்செயலாளர் ராஜ மகேந்திரன், எல்ஐசி முகவர் சங்க தென் மண்டலக்குழு உறுப்பினர் பொன்.வேலுச் சாமி, ஏஐபிஓசி வங்கி அதி காரிகள் சங்க சந்தானம் ஆகி  யோர் பேசினர்.  முன்னதாக ஐசிஇயு தஞ்சைக் கோட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ் வரவேற் றார். முடிவில் ஐசிஇயு தஞ்சை கோட்ட இணைச் செய லாளர் பன்னீர்செல்வம் நன்றி  கூறினார்.

கரூர்
காப்பீட்டு கழக ஊழியர்  சங்கத்தின் கரூர் கிளை களின் சார்பில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் தஞ்சை கோட்ட துணைத் தலைவர் வி.கணேசன் தலைமை வகித்தார். எல்ஐசி ஊழியர் சங்க கிளை-2 ன் தலைவர் என்.பெருமாள் வர வேற்றுப் பேசினார். சிஐடியு சங்க கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் எம்.சுப்ரமணியன், கேவிபி வங்கி ஊழியர் சங்க  அகில இந்திய பொதுச்செய லாளர் ஐ.வெங்கடேசன், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். கரூர் எல்ஐசி முகவர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் கே.பால சுப்பிரமணியன், லிகாய் முக வர் சங்கத்தின் மாநில நிர்வாகி கே.அழகர்சாமி, கந்த சாமி, சங்கக் கிளை நிர்வாகி கள்  நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கரூர் நகரக் காவல்துறைக்கு சிஐடியு கண்டனம் 
எல்ஐசி ஊழியர் சங்கம்  சார்பில் தர்ணா போராட் டத்திற்காக பந்தல் அமைக் கும் பணி நடைபெற்றது. அப்போது கரூர் நகர காவல் துறையினர் பந்தல் அமைக்க  கூடாது, அமர்வதற்கு நாற்கா லிகள் போடக்கூடாது என்று  சங்க நிர்வாகிகளை தடுத்த னர். கடுமையாக வெயில்  அடிக்கிறது. வயதான வர்கள், பெண்கள் இருக்கிறார் கள். இரண்டு மணி நேரம் மட்டுமே தர்ணா போராட்டம் நடைபெறும். ஆகையால் போக்குவரத்திற்கு இடை யூறு இன்றி பந்தல் அமைக்க  அனுமதி வழங்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் கடுமை யாக எதிர்ப்பு தெரிவித்தனர். மீறி பந்தல் அமைத்தால் அனைவரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்படு வர் என காவல்துறையினர் சங்க நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்தனர். கடும்  வெயிலில் போராட்டக்காரர் களை அமர வைத்து வேடிக்கை பார்க்கும் கரூர் நகர காவல்துறையின் இந்த  செயலை சிஐடியு கரூர் மாவட்ட குழு வன்மையாக கண்டிப்பதாக கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் கூறினார்.

;