districts

சிறைக்கு அஞ்சா தியாகி வேதையன்

திருத்துறைப்பூண்டி, அக்.19 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே உள்ள பெரிய சிங்களாந்தி யில் முத்து மணியம்மை தம்பதிக்கு 1924-  இல் மகனாகப் பிறந்தவர் தோழர் வேதை யன். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த  போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் தோழர் வேதையனும் ஒருவர். தனது சிறு வயதில் குஞ்சிதபாதம் என்ப வர் பண்ணையில் வேலை பார்த்து வந்த  தோழர் வேதையன், பண்ணை மணியக்கார்  இவரை தாக்கிய போது, அவரை வேதை யன் திருப்பித் தாக்கினார். அதிலிருந்து பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான  தனது போராட்டத்தைத் துவக்கிய வேதை யன், பின்னாளில் பி.சீனிவாசராவ்-ஐ நேரில் சந்தித்து தன்னை விவசாய சங்கத்தில்  இணைத்துக் கொண்டார். பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் சங்கம் அமைக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டார். வடபாதிமங்கலம் சோம சுந்தர முதலியார், பண்ணையில் கொடி யேற்றக் கூடாது என தடுத்த போது, அதற்கெல்லாம் அஞ்சாமல் தோழர்கள் பி.எஸ். தனுஷ்கோடி, கே.ஆர். ஞானசம்பந் தன், மணலூர் மணியம்மை ஆகியோரு டன் சேர்ந்து சங்க கொடியை ஏற்றி பறக்க  விட்டார்.  சாமானிய மக்களின் உரிமைகளுக்காக போராட ஆரம்பித்த வேதையன், தனது வாழ்நாளில் பல நாட்களை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. அறுவடைக் கூலியை களத்துமேட்டிலேயே வழங்க  வேண்டும் என்ற விவசாயத் தொழிலாளர் களின் கோரிக்கைக்கான போராட்டத்தில் தோழர் வேதையனுக்கு 9 மாதம் சிறை தண்ட னையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது.  அம்மளூரில் சங்க கொடியை ஏற்றும் பிரச்சனையிலும், ஒன்பது மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டத்தின்போது கள்ளிக்குடியில் நடைபெற்ற கூட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த வெங்கடாச்சலம் என்பவரை தியாகி சிவராமனோடு இணைந்து எதிர்த்த போது பிரச்சனை கலவரமானது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வேதை யன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். நெடும்பலம் சாமியப்ப முதலியார் வீடும், பால் நிலையமும் சூறையாடப்பட்ட வழக்கில் 173 பேரில் வேதையனும் கைது செய்யப்பட்டார். பி.சீனிவாச ராவ் தலைமை யில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத் தில் பங்கேற்று, சென்னை மத்திய சிறைக்கு  சென்றார். புறம்போக்கு தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்த வழக்கில் 7 பேரில் வேதையனும் சேர்க்கப் பட்டார். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி  உதயமான போது கோ.வீரையன், பி.எஸ்.  தனுஷ்கோடி ஆகியோரோடு இணைந்து கட்சியை வளர்க்க தீவிரமாகப் பணியாற்றி னார். பின்னர் தாலுகா செயலாளர், விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர், வீடு  கட்டும் சங்கத்தின் இயக்குனர் என கட்சி பணியாற்றியவர் பேரூராட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று பொறுப்புகளை வகித்தார்.  பி.சீனிவாசராவ், பி.எஸ்.தனுஷ்கோடி, இரணியன், சிவராமன், மணலி கந்தசாமி,  கே.ஆர். ஞானசம்பந்தன், எம்.காத்தமுத்து,  கோட்டூர் ராசு உள்ளிட்ட முதல் தலைமுறை யினரோடு  இயக்கப் பணியாற்றிய வேதை யன், பின்னாளில் இளைய தலைமுறையி னரோடும் ஒன்றிணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.  20.10.2010 இல் தோழர் வேதையன் கால மானார். திருத்துறைப்பூண்டி கட்சி அலுவ லகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றங்கரையில் தோழர் பி.சீனி வாசராவ் சமாதிக்கு அருகில் அவரது உடல்  அடக்கம் செய்யப்பட்டது. தற்போது வரை  ஆண்டுதோறும் அக்டோபர் 20 அன்று,  ‘சிறைக்கு அஞ்சா தியாகி வேதையனுக்கு’  மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரு கிறது. - கே.ஜி.ரகுராமன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர், திருவாரூர்.

;