districts

ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்க! வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

மன்னார்குடி, ஜூலை 10 - திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றிய 16 ஆவது மாநாடு ஆலங்குடி தமிழரசி திருமண மண்டபத் தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் பி.விஜய் தலைமை வகித்தார். தினேஷ் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டப்  பொருளாளர் ஏ.கே.வேலவன் துவக்க உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட துணை செயலாளர் எஸ்.இளங் கோவன் பேசினார். மாநாட்டை நிறைவு  செய்து மாவட்ட தலைவர் எஸ்.முகமது சலாவுதீன் பேசினார்.  மாநாட்டில் தலைவராக சந்திர சேகர், செயலாளராக விஜய், பொரு ளாளராக ராஜேந்திரன், துணைத் தலை வராக அருண்குமார், துணைச் செய லாளராக தினேஷ் உள்ளிட்ட 12 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.  வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள  நியாய விலைக் கடைகளில் ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கிட  வேண்டும். தென் குலவேளியில் உள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் மரத்தடி யில்தான் வகுப்பறைகள் நடத்தப்பட்டு  வருகின்றன. அந்தப் பள்ளிக்கு உடனடி யாக புதிய வகுப்பறை கட்டித் தர  வேண்டும். ஒன்றியத்தில் விண்ணப்பித் துள்ள அனைத்து பயனாளிகளுக்கும் புதிய ரேசன் அட்டை வழங்க வேண்டும்.  சாரநத்தம் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்.   ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகா தார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாரநத்தம் ஊராட்சி யில் இருந்து வேடம்பூர் கொக்கலாடி பகுதியில் கட்டப்படாமல் உள்ள சாறு  வாய்க்கால் சட்ரஸ் பாலத்தை உடனடி யாக கட்டி தர வேண்டும். ஒன்றியத்தில் கஞ்சா போதைப் பொருள் விற்ப னையை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

;