districts

img

ஒப்பந்த தொழிலாளர் நிரந்தரம் என்ற வாக்குறுதி என்னாச்சு? தமிழக அரசுக்கு ஜி.சுகுமாறன் கேள்வி

திருவள்ளூர், பிப் 8- அரசு துறைகள் எல்லாம் தனியார் துறையை நோக்கி வேகமாக நகர்த்தப்படுகிறது, இதனை தடுக்க தொழிலாளர்களின்  வலுவான போராட்டங்கள் தேவை என சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தெரிவித்தார். ஒன்றிய பாஜக அரசின்  தொழி லாளர் விரோத கொள்கைகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சிஐடியு சார்பில் செவ்வாயன்று (பிப் 7) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.  இதில் வடசென்னை அனல் மின் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கலந்து கொண்டு பேசுகையில், ஒப்பந்த முறையை மிக வேகமாக எல்லா துறையிலும் கொண்டுவர ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த காலங்களில் நிரந்தர பணியாளர்கள் செய்து வந்த வேலைகளை கூட தற்போது ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து செய்கின்றனர்.   காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு தயாராகயில்லை.  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி  பணியிடங்கள் இருக்கிறது. இதனை நிரப்புவதற்கு பதிலாக அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைப்பது என்கின்ற வேலையை வேகமாக செய்து வருகிறது. இப்போது அறிவித்திருக்கிற பட்ஜெட்டில் கூட வேலை வாய்ப்புக் கான எந்த அறிவிப்பும் இல்லை. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்  படுத்தவும், உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு எந்த அறிவிப்பும் இல்லை . திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள்  அரசுத்துறைகளில்  10 ஆண்டுகள் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது. ஆட்சிஅமைத்து இரண்டு ஆண்டுகளாகியும் வாக்குறுதியை  நிறைவேற்றவில்லை. மாறாக எல்லா வற்றையும் அவுட் சோசியல் என்ற முறையில் தனியாரிடம் ஒப்படைப்பது என்ற அறிவிப்புகளை செய்து வருகின்றனர். அதேபோல உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழி லாளர்களை வைத்துத்தான் வேலை வாங்குகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், மீஞ்சூர் உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் உள்ள தொழிற்சாலைகளில்  நிரந்தர தொழில் இல்லாமல் அனைத்தையையும் ஒப்பந்த முறையில் தான் மேற்கொள்ளப் படுகிறது. எண்ணூர்அனல் மின் நிலை யம், வடசென்னை அனல் மின் நிலை யம் வல்லூர் அனல் மின் நிலையம், ஐஓசி போன்ற அரசுத்துறைகளில்  இந்த முறையை தான் கடைபிடிக்கப் படுகிறது.  அரசு உடனடியாக நிரந்தர பணிகளில் நிரந்தர தொழிலாளிகளை தான் அனுமதிக்க வேண்டும் தவிர ஒப்பந்த முறையில் அனுமதிக்க கூடாது.  ஒப்பந்த முறையில் பணி யாற்றுபவர்களை அந்தந்த ஆலை களில் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்றார்.  இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், துணை நிர்வாகிகள் இ.ஜெயவேல், பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் நித்தியானந்தம், கோட்ட தலைவர் ஆர்.சங்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;