districts

மகளிர் தொழிற்பயிற்சி நேரடி சேர்க்கைக்கு ஆட்சியர் அழைப்பு

திருவள்ளூர், அக். 22- திருவள்ளூர் மாவட்டம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூரில் அக்டோபர் 30 வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 8ஆம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் +2 தேர்ச்சி, தேர்ச்சி பெறாத வர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பேருந்து பாஸ், சைக்கிள்,  பாடப்புத்தகங்கள், வரை படக் கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவ னங்களில் வேலை போன்றவை வழங்கப் படும் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ்,  ஆதார் அட்டை, பாஸ்போர்ட்; அளவு புகைப்படம் 5 ஆகியவற்றை எடுத்து  வர வேண்டும். கம்மியர் கருவிகள் பயிற்சி காலம் 2 வருடம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,  கோபா பயிற்சி காலம் 1 வருடம்,   10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,   செயலகப் பயிற்சி 1 வருடம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்,  கட்டிடப்பட வரைவாளர் பயிற்சி காலம் 2 வருடம்,  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், தையல் தொழில் நுட்பம்  பயிற்சி காலம் 1 வருடம்  8 ம் வகுப்பு தேர்ச்சி  பெற்று இருக்க வேண்டும், இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

;