districts

img

பேரூராட்சி நிலத்தை மீட்டெடுக்க கும்மிடிப்பூண்டியில் முற்றுகை

திருவள்ளூர், செப் 29- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்  நகரில் சென்னையை சேர்ந்த தனிநபர் 5.60 ஏக்கர் நிலத்தை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார்.  வீட்டு மனைகளாக பிரிக்கும் போது பள்ளிக்கூடத்திற்கு என 46 செண்ட் நிலமும்,  பூங்காவிற்கு என 86 சென்ட் நிலத்தை யும் ஒதுக்கியுள்ளனர்.இந்த நிலத்தை முறைப்படி பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் பள்ளிக்கூடத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஊராட்சி ஒன்றியம் துவக்கப்பள்ளி கட்டப்பட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பூங்காவிற்க்கு ஒதுக்கப்பட்ட 86 செண்ட் நிலத்தில்  சிலர் சட்ட விரோத மாக 11 வீடுகளை கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றி பூங்காவை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யின் கட்சியின் தலைமையில் ஜெய்ஹிந்த்  நகர் மக்கள்,  ரெட்டம்பேடு சாலையிலிருந்து  ஊர்வலமாக வந்து பேரூராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா விட மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி நகர கிளைச் செயலாளர் வி.ஆர்.லட்சு மணன் தலைமை தாங்கினார். இதில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசி நாராயணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், வட்டக் குழு உறுப்பினர் ப.ேொகநாதன், ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார், மூத்த உறுப்பினர் ஆறுமுகம், ஹிந்த் நகர் நிர்வாகிகள் கே.மணி, ஏகாம்ப ரம், எம்.ஜி.ராமச்சந்திரன், வில்வாழி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;