districts

img

காத்திருப்பு போராட்டம் வெற்றி மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு கிடைத்தது சம்பளம்

திருவள்ளூர், ஏப். 2 - மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்க ளுக்கு ஊதிய நிலுவை வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இதன்வாயிலாக சிஐடியு  நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றது. மக்களை தேடி மருத்துவம் திட்டம்  திருவள்ளூர் மாவட்டத்திலும் செயல்படுத்தப் படுகிறது.இத்திட்ட ஊழியர்கள் வீடுகளை தேடி சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கு வது, மாதிரிகளை ஆய்வு கூடங்களுக்கு அனுப்புவது என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்றி வந்தனர்.  2021ஆம் ஆண்டு முதல் திருவாலங்காடு ஒன்றியத்தில் பணியாற்றி வந்த 10 ஊழியர்களை திடீரென நிறுத்திவிட்டனர். இதன்பின்னர் கந்தாண்டு அக்டோபர் மாதம் கள ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளர் ஆகியோர் இவர்களின் பணிகளை பாராட்டி,  தொடர்ந்து பணியாற்ற பணி நீட்டிப்பு செய்தனர். பணி நிறுத்தப்பட்ட செப்டம்பர் - நவம்பர்  மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. இந்த நிலையில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும், சம்பள பாக்கியை உடனடியாக தர வேண்டும் என வலியுறுத்தி ஏப்.1 அன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினர். இதனையடுத்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சங்கத் தலைவர் களை அழைத்து பேசினார். சம்பள பாக்கியை  உடனடியாக வழங்கவும்; மீண்டும் பணி வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யாளித்தார். இந்தப்போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், துணைத் தலைவர் ஏ.ஜி.சந்தானம்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;